புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை உட்கோட்டம் கந்தரவக்கோட்டை காவல்நிலையம் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் மக்களிடம் அவர்களின் குறைகளை நேரடியாக கேட்டு மக்களின் குறைகளை நிறைகளாக மாற்ற உறுதி அளித்துள்ளோம்.. குழந்தை திருமணம் மற்றும் குழந்தை தொழிலாளிகளை ஒழிப்பது பற்றிய விழிப்புணர்வும் மற்றும் ஆலோசனையும் வழங்கப்பட்டது. குறிப்பாக ஆன்லைன் மோசடி பற்றி விளக்கமாக மக்களிடம் எடுத்துரைத்தோம். இளைஞர்கள் பயன்படுத்தும் போதை பொருட்களினால் ஏற்படும் விளைவுகள் மற்றும் அதன் மூலம் ஏற்படும் வழக்குகள் பற்றி எடுத்துரைத்து அவர்களை நல்வழி படுத்தும் அறிவுரைகளும் வழங்கப்பட்டது.