சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்கள் உத்தரவின்பேரில், சென்னை பெருநகர காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்றங்கள் புதுப்பிக்கப்பட்டும், (GCP-Police Boys and Girls Club) புதுப்பொலிவுடன் நவீன மயமாக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில் சென்னை பெருநகர காவல் சிறுவர் மற்றும் சிறுமியர் மன்றங்களைச் சேர்ந்த சிறார்களுக்கு 03.06.2022 மற்றும் 04.06.2022 ஆகிய 2 நாட்கள் சங்கர நேத்ராலயா மருத்துவ குழுவினரின் உதவியுடன் கண் பரிசோதனை மருத்துவ முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்றங்களின் மேற்பார்வை அதிகாரி (Nodal Officer) திருமதி.S.ராஜேஸ்வரி, இ.கா.ப., இணை ஆணையாளர் (மேற்கு மண்டலம்) அவர்கள் எழும்பூர், இராஜரத்தினம் மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கெண்டு காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்ற சிறுவர்களுக்கான கண் பரிசோதனை மருத்துவ முகாமை துவக்கி வைத்தார். இந்த கண் பரிசோதனை மருத்துவ முகாமில் மேற்கு மண்டலம் மற்றும் கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்றத்தை சேர்ந்த 300 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.