திருப்பூர் மாநகரம் வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நொச்சிபாளையம் பிரிவில் இருந்து விக்னேஸ்வரா நகர் செல்லும் வழியில் கடந்த 27.04.2022 அன்று சுப்பிரமணி என்பவரின் செல்போனை கத்தியை காட்டி மிரட்டி பறித்து சென்றது தொடர்பாக வீரபாண்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இந்த வழக்கில் தொடர்புடைய எதிரி 1. யாசர் அராபத் (வயது 23) தபெ அபுதாஹிர், ராஜ வீதி, டூம் லைட் மைதானம், காங்கேயம் ரோடு, திருப்பூர் உள்ளிட்ட ஆறு எதிரிகள் வீரபாண்டி காவல் நிலைய காவல் ஆய்வாளரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதில் மூன்று எதிரிகளுக்கு கடந்த 21.05.2022 அன்றும், இரண்டு எதிரிகளுக்கு 31.05.2022 அன்றும் குண்டர் தடுப்பு சட்ட ஆணை பிறப்பிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேற்படி வழக்கில் தொடர்புடைய மேலும் ஒரு எதிரி 1.யாசர் அராபத் மீது ஒரு கொலை முயற்சி மற்றும் ஒரு கூட்டுக்கொள்ளை ஆகிய இரண்டு வழக்குகளும் உள்ளது. மேற்படி எதிரி தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு பொது ஒழுங்கிற்கும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் ஈடுபட்டு வருவதால் இவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க திருப்பூர் மாநகர காவல் ஆணையர் திரு. ஏ.ஜி.பாபு, இ.கா.ப அவர்கள் ஆணையிட்டுள்ளார்.
கோயமுத்தூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள எதிரி 1.யாசர் அராபத், ஓர் ஆண்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க 01.06.2022 அன்று ஆணை வழங்கப்பட்டது. திருப்பூர் மாநகரத்தில் பொது அமைதிக்கும் பொதுமக்களுக்கு தொடர்ந்து அச்சுறுத்தும் வகையில் குற்ற செயல்களில் ஈடுபட்ட 43 நபர்கள் 2022 ம் ஆண்டில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.