போக்குவரத்து வடக்கு மாவட்டம் B1 வடக்கு கடற்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட Parrys Corner சந்திப்பில் 02.08.2022 அன்று பணியில் இருந்த திருமதி.வித்யா பொற்கொடி அவர்கள், சந்தேகத்திற்கு இடமான ஒரு ஆட்டோவை நிறுத்த முற்பட்ட போது ஆட்டோ டிரைவர் அப்பெண் தலைமை காவலரை இடித்து காயம் ஏற்படுத்தி செல்ல முற்பட்ட போது ஆட்டோவை பிடித்து B1 வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். மேற்படி பெண் தலைமை காவலரின் துனிகரமான செயலை கனம் துணை ஆணையாளர் போக்குவரத்து வடக்கு மாவட்டம் அவர்கள் மேற்படி தலைமை காவலரின் இல்லத்திற்கு நேரில் சென்று பாராட்டியும் அவருக்கு ஆறுதலும் தெரிவித்தார்.