தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டைக்கு சட்டம் ஒழுங்கு மேம்படுத்தவும், திருட்டுக்களை ஒழிக்கவும், பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்று பட்டுக்கோட்டை புதிய டிஎஸ்பியாக பொறுப்பேற்றுள்ள பிரித்விராஜ் சவுகான் தெரிவித்துள்ளார்.
பட்டுக்கோட்டை துணை காவல்கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த (பொறுப்பு) சுபாஷ் சந்திரபோஸ் பணியிடமாற்றம் செய்யப்பட்டார். பொறுப்பில் இருந்த 2 மாதங்களில் மக்களிடம் நன்மதிப்பை பெற்றார். இந்நிலையில் குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று பயிற்சி முடித்த காவல்கண்காணிப்பாளர்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர். இதையடுத்து பட்டுக்கோட்டை காவல்கண்காணிப்பாளராக பிரித்விராஜ் சவுகான் பொறுப்பேற்றுக்கொண்டார். அவர் கூறும்போது, சட்டம் ஒழுங்கு பிரச்சனை, திருட்டுகளை அறவே ஒழிக்க காவல்துறையோடு பொதுமக்களும் இணைந்து செயலாற்ற வேண்டும். பொதுமக்களும், காவலர்களும் நண்பர்களாக பழக வேண்டும். கஞ்சா, புகையிலை பொருட்கள் விற்பனையை அறவே இல்லாமல் ஒழிப்பதுடன் இதில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றார்.
புதிதாக பொறுப்பேற்றுள்ள டிஎஸ்பி பிரித்விராஜ் சவுகான் அவர்களின் தந்தையும் காவல்துறை அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது. நீதியின் நுண்ணறிவு புலனாய்வு இதழின் சார்பில் பணி சிறக்க வாழ்த்துக்கள்.