கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கணியாமூர் கிராமத்தில் தனியார் மேல்நிலைப் பள்ளி மாணவி ஒருவர் கடந்த 13ந்தேதி மர்மமான முறையில் மரணம் அடைந்தார். அந்த சமயம் , மாணவி மரணம் சந்தேக மரணமாக என வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி. ராஜலட்சுமி தலைமையில் விசாரணை நடத்தினர். இதற்கிடையில் , கடந்த 17ந்தேதி மாணவி மரணம் நீதி கேட்டு நடைபெற்ற போராட்டம் ஒரு கட்டத்தில் கலவரமாக மாறிப்போனது.இதையடுத்து மாணவியின் மரணம் தொடர்பான வழக்கு சிபிசிஐடி மாற்றப்பட்டது.
மேலும் கலவரம் குறித்த விசாரணை சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. அது மட்டுமின்றி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், மாவட்ட கண்காணிப்பாளர், மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோர் அதிரடியாக மாற்றப்பட்டனர்.
இந்த நிலையில் மாணவி மரணம் தொடர்பாக வழக்கை முதன் முதலில் விசாரித்த கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி.ராஜலட்சுமி அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டிருக்கிறார். இவருக்கு பதிலாக இராணி பேட்டை மாவட்டம், அரக்கோணம் டி.எஸ்.பி.புகழேந்தி கணேசன் கள்ளக்குறிச்சி புதிய டி.எஸ்.பி.- யாக நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை டிஎஸ்பியாக சிறப்பாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு நீதியின் நுண்ணறிவு சார்பில் வாழ்த்துக்கள்.