தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை உட்கோட்டம் மதுக்கூர் காவல் நிலைய சரகம் சிராங்குடியை சேர்ந்த சுரேஷ்@சத்யராஜ் மீது கொலை ஆதாய கொலை திருட்டு வழக்குகள் இருந்து வந்த நிலையில் கரூர் மாவட்டம் மாயனூர் காவல் நிலையத்தில் நடைபெற்ற ஆதாய கொலை வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மேற்படி கொடுங் குற்றவாளி திருச்சி மத்திய சிறையில் தண்டனை கைதியாக இருந்து வந்த நிலையில் கடந்த 7.7.2022 ம் தேதி இரண்டு நாட்கள் போலிஸ் காவலுடன் கூடிய பரோலில் மதுக்கூரில் உள்ள தனது வீட்டிற்கு வந்து இருந்தவர் 9.7.2022 அன்று அதிகாலை தப்பித்து சென்று தலைமறைவாகிவிட்டார்.
மேற்படி எதிரி மீது மதுக்கூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு மேற்கண்ட குற்றவாளி மீது அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேற்படி எதிரியை பிடிக்க பட்டுக்கோட்டை உட்கோட்ட குற்றப்பிரிவு தனிப்படை உதவி ஆய்வாளர் ஸி.சந்திரசேகரன் அவர்களின் தலைமையில் காவலர்கள் அருண்குமார், இஸ்மாயில் தியாகராஜன் ஆகியோர்களை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இதுவரை குற்றவாளி பற்றிய எந்த ஒரு துப்பும் கிடைக்காத நிலையில் விழுப்புரத்தில் பதுங்கி இருப்பதாக கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் பெயரில் தனிப்படை உதவி ஆய்வாளர் தலைமையிலான போலீசார் மேற்படி எதிரியை விழுப்புரம் அருகே சுற்றி வளைத்து ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த குற்றவாளியை அதிரடியாக கைது செய்தனர்.