உலக மருந்தாளுனர்கள் தினம் வரும் 25.09.2022 அன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு பல்லவன் மருந்தியல் கல்லூரி மற்றும் காஞ்சிபுரம் கிழக்கு ரோட்டரி சங்கத்தினர் சுமார் 220 மாணவ, மாணவிகள் இணைந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் 23.09.2022 அன்று காலை 10.40 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது.
இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.வி.சுதாகர் அவர்கள் கலந்துகொண்டு போதைப் பொருள் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.