தென்காசி மாவட்டம், அய்யாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட களப்பன்குளம் ஜங்ஷன் பகுதியில் காவல் ஆய்வாளர் கருப்பசாமி அவர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த ஆட்டோவை சோதனை செய்ததில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
இது குறித்து விசாரணை மேற்கொண்டு சட்ட விரோதமாக புகையிலைப் பொருட்களை வைத்திருந்த களப்பன்குளம் பகுதியை சேர்ந்த பேச்சுமுத்து என்பவரின் மகன் கருப்பசாமி, முருகன் என்பவரின் மகன் பவுல்ராஜ், செல்வம் என்பவரின் மகன் ரவி மற்றும் காளிராஜ் என்பவரின் மகன் காளிராஜ் ஆகிய நான்கு நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து கருப்பசாமி என்ற நபரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தார்.
மேலும் அவர்களிடமிருந்து 72 கிலோ எடை கொண்ட 26,160 ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்கள் மற்றும் ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.