தென்காசி மாவட்டம், ஆலங்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 08.10.2022 அன்று பூலாங்குளம் பகுதியில் வட்டலூரை சேர்ந்த முத்துராமலிங்க ராஜன் என்பவரை கொலை செய்த வழக்கின் குற்றவாளிகளான கடல்மணி@கடற்கரை மற்றும் ராபின் ஆகியோரை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் மிறிஷி அவர்கள் அறிவுறுத்தியதன் பேரில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவின் பேரில் மேற்படி வட்டலூரை சேர்ந்த அருணாசலம் என்பவரின் மகன் கடல்மணி@கடற்கரை(40) மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் அழகுமணி என்பவரின் மகன் ராபின்(43) ஆகியோரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து தடுப்புக் காவல் உத்தரவு ஆணையை பாளையங்கோட்டை மத்திய சிறையில் காவல் ஆய்வாளர் திரு.மகேஷ் குமார் அவர்கள் சமர்பித்தார்..