தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே பிரசித்தி பெற்ற திருச்சிற்றம்பலம் புராதானவனேஸ்வரர் பெரியநாயகி அம்மன் கோவில் மற்றும் சேதுபாவா சத்திரம் விளாங்குளம் சிவன் கோயில் மேற்குடி காடு சிவன் கோவில்களில் தொடர் சிலை கொள்ளையில் ஈடுபட்டவர்களை பிடிக்க தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் திரு பிரித்விராஜ் அவர்களின் மேற்பார்வையில் பட்டுக்கோட்டை உட்கோட்டம் உதவி ஆய்வாளர் தனிப்பிரிவு திரு சந்திரசேகரன் அவர்களின் தலைமையில் காவலர்கள் அருண்குமார், ராகவன், இஸ்மாயில், தியாகராஜன் சத்திதானந்தம் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்த நிலையில் உதவி ஆய்வாளர் திரு சந்திரசேகரன் தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஒரே இரவில் அடுத்தடுத்து 9 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டு ஆறு சுவாமி சிலைகள் மீட்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.