தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் ஒட்டங்காடு ஊராட்சியில் உள்ள டாஸ்மாக் கடையில் அரசு அனுமதி இல்லாத பார் அரசு அனுமதித்த நேரத்திற்கு முன்னும் பின்னும் பாட்டில் வியாபாரம் திமுக கட்சிக்காரர்களால் கொடிகட்டி பறந்தது. இந்த ஊராட்சியில் எல்லா மதத்தினரும், எல்லா ஜாதியினரும் உள்ளார்கள். ஜாதிக்கு ஒருவராக பங்கு போட்டு விற்பனை செய்தார்கள்.
பேராவூரணி பட்டுக்கோட்டை மெயின் சாலையில் ரோட்டின் ஓரமாக டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. அதுவும் விதிமுறைப்படி இல்லாமல் சாலையின் அருகாமையிலேயே உள்ளது. 10க்கும் மேற்பட்ட விபத்துக்கள் நடந்ததோடு மூன்று உயிர்களும் பலியாகி உள்ளது. சட்டவிரோதமான வியாபாரதத்தை நிறுத்தவே முடியவில்லை. காவல்துறையும் மாதாமாதம் வாங்கும் மாமூல் பணத்தை எவ்வளவோ உயர்த்தியும் பார்த்து விட்டார்கள். தனித்தனியாகவும் பணம் கேட்டு மிரட்டி வாங்கியும் காலை மாலை வணிகம் குறையவில்லை. சுமார் 500 பாட்டில்கள் வரை விற்பனையானது.
தஞ்சைக்கு புதிதாக வந்துள்ள மாவட்ட காவல்கண்காணிப்பாளர் ஆஷிஸ் ராவத் அவர்கள் மதுகடைகளின் விற்பனை நேரம் போக காலை மாலை வியாபாரத்தை கடையில் உள்ள சட்டவிரோத பாரில் விற்பனை செய்ததை முழுவதுமாக கட்டுக்குள் கொண்டு வந்துள்ளார்கள் என்பது மிகவும் பாராட்டுக்குரியது.
நெல்லை சேரன்மகாதேவி என்ற இடத்தில் ஏடிஎஸ்பியாக பணியாற்றினார். அதன்பின்பு டெல்லி தமிழ்நாடு சிறப்பு காவல்படை 8வது பட்டாலியன் கமாண்டெண்ட் ஆகவும், மீண்டும் தமிழகத்திற்கு நீலகிரி மாவட்டத்திற்கு காவல் கண்காணிப்பாளராக பணியமர்த்தப்பட்டார்.
தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக 16.01.2023 அன்று பொறுப்பேற்றவுடன் தஞ்சை மாவட்டம் முழுவதும் டீக்கடைகள் இரவு 10 மணிக்குமேல் இருக்கக்கூடாது என்று சொன்னதோடு நடைமுறையும் படுத்தியுள்ளார். தஞ்சை மாவட்டம் முழுவதும் இந்த நடைமுறை உள்ளதாக நமக்கு தகவல் வருகின்றது. எனவே காவல்கண்காணிப்பாளரை மிகவும் முழுமனதோடு பாராட்டுகின்றேன். மாவட்டம் முழுவதும் உள்ள காவல்ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் என அனைவரும் காவல் கண்காணிப்பாளருக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தால் நமது தஞ்சை மாவட்டம் சிறந்த மாவட்டமாக பெயர் பெறும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் ஆளும் கட்சிக்காரர்களின் திருட்டு வியாபாரத்தையும், அடாவடியையும் கட்டுப்படுத்த இன்னும் முயற்சி தேவை.