01.05.2023 அன்று நாகப்பட்டினம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் கடத்தல் ஆகியவற்றினை கட்டுப்படுத்தும் விதமாக நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கு.ஜவகர்.இகாப., அவர்களின் உத்தரவின் பேரில் காவல்துறையினரால் தீவிர மதுவிலக்கு வேட்டை நடத்தப்பட்டு பல்வேறு மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. மேற்படி காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் 01.05.2023 அன்று காலை 6.00மணி அளவில் கீழ்வேளூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது வெளி மாநிலத்திலிருந்து கடத்திவரப்பட்ட 400 லிட்டர் பாண்டி விஷ சாராயமும் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 1 நான்கு சக்கர வாகனங்களையும் காவல்துறையினர் கைப்பற்றினர். தப்பிச்சென்ற கடத்தல் காரர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலும் இதுபோன்ற மதுக்கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறாமல் இருக்க தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும், என்றும் குற்றவாளிகள் அதிரடியாக குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.