திருப்பூர் மாவட்டம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று திருப்பூர் குமரன் சாலையில் தறி கேட்டு ஓடிய லாரி ஏற்படுத்திய விபத்தில் ஒருவர் பலியானார். அதே நேரத்தில் அந்த ரோட்டில் சென்ற ஏழுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களும் நான்கு நான்கு சக்கர வாகனங்களும் விபத்தில் சிக்கி சின்னா பின்னம் ஆனது. இச்சம்பவம் திருப்பூர் மாநகர பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து தடை செய்யப்பட்ட நேரங்களில் மாநகர சாலைகளில் லாரிகளை இயக்கக் கூடாது என லாரி உரிமையாளர்களுக்கு மாநகர போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளுடன் திருப்பூர் மாநகர போக்குவரத்து காவல் உதவி ஆணையாளர் சுப்புராமன் தலைமையில் போக்குவரத்து ஆய்வாளர்கள் பாண்டியராஜன் சரவணன் ஆலோசனை நடத்தினர். இதில் காலை 8:00 மணி முதல் 12 மணி வரையும் மதியம் மூன்று மணிக்கு மேல் இரவு 9 மணி வரையும் மாநகருக்குள் லாரிகளை இயக்கக் கூடாது என மாநகர போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கண்டைனர் லாரி உரிமையாளர்கள் மற்றும் சங்கத் தலைவர் நடராஜன் அனைத்து லாரி உரிமையாளர்களும் கலந்து கொண்டனர்.