பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை காக்கும் “இமைகள் திட்டம்” குறித்த கருத்தரங்கம் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 01.07.2023 ம் தேதி நடைபெற்றது. இக்கருத்தரங்கத்தில் முனைவர் எம்.எஸ். முத்துசாமி இ.கா.ப., காவல்துறை துணைத் தலைவர் வேலூர் சரகம் அவர்கள் சிறப்புரையாற்ற திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஆல்பர்ட் ஜான் இ.கா.ப., அவர்கள் முன்னிலை வகித்தார்.
️மேலும் இக்கருத்தரங்கத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் திரு.முத்துமாணிக்கம், திரு.புஷ்பராஜ் மற்றும் அனைத்து உட்கோட்ட காவல்துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் நேரடி உதவி ஆய்வாளர்கள் என 60 க்கும் மேற்பட்ட காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
️மேலும் இக்கருத்தரங்கத்தில் சிறப்புரையாற்றிய காவல்துறை துணைத் தலைவர் அவர்கள் குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாப்பதை குறித்தும், அதைச் சார்ந்த சட்டங்கள் குறித்தும், வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை மேற்கொள்வது குறித்தும், பாதிக்கப்பட்ட நபருக்கு இழப்பீடு தொகை மற்றும் மறுவாழ்வு ஏற்பாடுகள் செய்வதை குறித்தும் மற்றும் குற்றம் நடவாமல் எவ்வாறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பதைக் குறித்தும் சிறப்புரையாற்றினார்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஷி.புஷ்பராஜ் நன்றி கூறினார்.