ஆவடி காவல் ஆணையரகத்தில் தமிழ்நாடு அரசின் உத்திரவின் பேரில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் மூலம் நேரடியாக மக்களை சந்தித்து புகார்களை பெற்று தீர்வு காணும் திட்டத்தின் படி கி.சங்கர் இ.கா.ப., காவல் ஆணையாளர், ஆவடி காவல் ஆணையரகம் 05.07.2023ம் தேதி முதல் தொடர்ச்சியாக புதன்கிழமைதோறும் மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
30.08.2023 நடத்தப்பட்ட மக்கள் குறை தீர்ப்பு முகாமில் கி.சங்கர் இ.கா.ப., ஆவடி காவல் ஆணையாளர் அவர்கள் பொது மக்களை நேரில் சந்தித்து புகார் மனுக்களை பெற்றார், மேலும் இதுவரை நிலுவையில் இருந்த 126 புகார் மனுக்களில் 96 மனுக்கள் விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது
முதல்வரின் முகவரியில் பெறப்பட்ட 108 மனுக்களில் தீர்வுகாணப்படாத 28 மனுக்களின் மனுதாரர்களை நேரில் வரவழைத்து உரிய அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பொது மக்கள் குறை தீர்க்கும் முகாம் தொடர்ச்சியாக நடைபெறும் என்று ஆவடி காவல் ஆணையாளர் தெரிவித்தார்.