சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்திப் ராய் ரத்தோர், இ.கா.ப. அவர்கள் சிறப்பாக பணிபுரிந்த பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவு காவல் துணை ஆணையாளர் G.வனிதா, Serious Crime Squad தெற்கு காவல் ஆய்வாளர் ரங்கநாதன், உதவி ஆய்வாளர்கள் ஜெய்கணேஷ், மஞ்சுளாதேவி, தலைமைக்காவலர்கள் ரவிகுமார், வெங்கட்ராமன். வினுராஜன், முதல்நிலைக்காவலர்கள் சூர்ய சந்திரன், சௌந்திரராஜன், காவலர்கள் மணிகண்டன், யோகேஷ்குமார், சரவணக்குமார், திருநாவுக்கரசு, பிரபு, மடிப்பாக்கம் உதவி ஆணையாளர் புருஷோத்தமன், சிறப்பு உதவி ஆய்வாளர் ரவி, தலைமைக்காவலர் சுப்பிரமணியபிள்ளை, முதல் நிலைக்காவலர் அகிலா. V-7 நொளம்பூர் காவல் நிலைய ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் பொன்ராஜ், உதவி ஆய்வாளர் கவியரசன். நவீன காவல் கட்டுப்பாட்டு அறை, காவல் கரங்கள் காவல் ஆய்வாளர் மேரிராஜு, சிறப்பு உதவி ஆய்வாளர் புனிதா, தலைமைக்காவலர்கள் ராதிகா, மகேஷ்வரி, லிசா, முதல் நிலைக்காவலர் கனகவள்ளி, காவலர் சபரிநாதன். W-13 வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் கமலாதேவி, தலைமைக்காவலர் வெற்றிசெல்வி, சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் பணிபுரியும் உதவி ஆய்வாளர் சிவாஜி, சிறப்பு உதவி ஆய்வாளர்கள் முத்து கிருஷ்ணன் சேகர், அசோக்குமார், கலையரசி, காளிமுத்து முதல்நிலைக்காவலர்கள் விஜி, மீனா, சாகுல் அமீது, கார்த்திக் தலைமைக்காவலர்கள் ஜெயகுமார், அன்புராஜ், சுந்தர்ராஜன், சசிகுமார், காவலர்கள் துர்கா, சாமி. பரத், அருள்பாண்டியன், என மொத்தம் 1 துணை ஆணையாளர், 1 உதவி ஆணையாளர், 4 காவல் ஆய்வாளர்கள். 10 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 32 காவல் ஆளிநர்கள் என மொத்தம் 48 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை (02.03.2024) நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையாளர் நி.வனிதா தலைமையிலான காவல் குழுவினர் கொத்தடிமைகளாக வேலைக்கு அமர்த்திய நபர்களை மீட்டும். Serious Crime Squad South காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் மடிப்பாக்கம் பகுதியில் காரில் கஞ்சா கடத்தி வந்த 3 சரித்திரப்பதிவேடு குற்றவாளிகளை கைது செய்து, அவர்களிடமிருந்து 303 கிலோ கஞ்சா, 2 கார்களை பறிமுதல் செய்தும், மடிப்பாக்கம் காவல் உதவி ஆணையாளர் தலையிலான காவல் குழுவினர் 28 ஆண்டுகள் தலைமறைவாகயிருந்த குற்றவாளியை ஓடிசா மாநிலம் சென்று கைது செய்தும், V-7 நொளம்பூர் காவல்நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளியை ஓடிசா மாநிலம் சென்று கைது செய்தும், நவீன காவல் கட்டுப்பாட்டாறை காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் கரங்கள் காவல் குழுவினர், சென்னையில் மீட்கப்பட்ட ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 19 பெண்மணியை அவரது கீ-13 வண்ணாரப்பேட்டை குடும்பத்தினரிடம் பத்திரமாக ஒப்படைத்தும், அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு நீதிமன்றத்தில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று தந்தும், மேலும் சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் பணிபுரியும் 18 காவல் ஆளிநர்கள் சிறப்பாக பணிபுரிந்துள்ளனர்.