தமிழ்நாடு காவல்துறையில் கடந்த 2023 ஆம் ஆண்டு உதவி ஆய்வாளராக தேர்ச்சி பெற்று பின்பு தமிழ்நாடு காவல் உயர் பயிற்சிகரத்தில் ஒரு வருடம் காலம் பயிற்சியினை முடித்துவிட்டு பின்பு மாவட்டங்களில் செயல்முறை பயிற்சிக்காக ஜிழிறிகி மூலம் தமிழ்நாடு முழுவதும் அனுப்பப்பட்டுள்ளனர்.
அதன் அடிப்படையில் நாகை மாவட்டத்தில் ஆறு பயிற்சி உதவி ஆய்வாளர்கள் அனுப்பப்பட்டு நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் இ.கா.ப அவர்களிடம் அறிக்கை செய்து 6 மாத காலம் செயல்முறை பயிற்சியில் ஈடுபட உள்ளனர், இதனைத் தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பயிற்சி உதவி ஆய்வாளர்களுக்கு காவல்துறையின் பணிகள் குறித்து அறிவுரைகள் வழங்கியதுடன், தமிழ்நாடு காவல்துறையில் தங்களை இணைத்துக் கொண்டதற்காக தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்கள்.