உஸ்பெகிஸ்தான் நாட்டின் டாஷ்கன்ட் நகரில் இம்மாதம் 14.05.2024 முதல் 20.05.2024 வரை 4-வது மத்திய ஆசிய கையெறிபந்து (Handball) போட்டி நடைபெற்றது. போட்டியில் தமிழ்நாடு காவல்துறை கையெறிப்பந்து அணி வீரர்கள் S.கண்ணன், M.கபில் கண்ணன் ஆகிய இருவரும் இந்திய அணிக்கு தேர்வாகினர்.
இப்போட்டியில் இரு வீரர்களும் இந்திய அணி சார்பாக விளையாடி மூன்றாவது இடத்தை வென்று தமிழ்நாட்டிற்கும், தமிழக காவல்துறைக்கும் பெருமை சேர்த்துள்ளனர். மேற்கண்ட வீரர்களை காவல்துறை தலைமை இயக்குனர் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கினார். கூடுதல் காவல் துறை இயக்குனர், ஆயுதப்படை சென்னை மற்றும் காவல்துறை தலைவர் (பொது) ஆகியோர் உடன் இருந்தனர்.