வரலாறு காணாத வெயில் தாக்கத்தை தற்போது நாம் கண்டு கொண்டிருக்கிறோம் என்பது ஒரு புறம் இருந்தாலும் எந்த சூழலிலும் மனிதநேயத்தை பின்பற்றி ஒருவருக்கொருவர் உதவும் சமூகப் பொறுப்பு கொண்ட செயல்களையும் நாம் அவ்வப்போது கண்டு கொண்டுதான் இருக்கிறோம்.
நாகை மாவட்டம் திருக்குவளையில் சுமார் 90 வயது மதிக்கத்த மூதாட்டி ஒருவர் அரிசி மூட்டையுடன் பேருந்துக்காக நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தத்தில் வெயிலின் தாக்கத்தை தாங்கிக்கொண்டு நின்று கொண்டிருந்தார். அதை தொடர்ந்து அவ்வழியாக சென்ற வலிவலம் காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் உதவி ஆய்வாளர் சுமதி என்பவர் மூதாட்டியை கவனித்து விசாரித்ததோடு அல்லாமல் வெயிலின் தாக்கத்தையும் அவரது வயதையும் கருத்தில் கொண்டு மூதாட்டியை தனது இரு சக்கர வாகனத்தில் ஏற்றி பத்திரமாக அவரை வீட்டில் கொண்டு போய் சேர்த்தார்.
நடந்த சம்பவத்தை கவனித்துக் கொண்டிருந்த உதவி ஆய்வாளரின் பின்னால் வந்த நபர் ஒருவர் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டதை தொடர்ந்து உதவி ஆய்வாளர் சுமதி அவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
பிள்ளைகளே பெற்றோர்களை கவனிக்க மறந்த இந்த காலத்தில் எனக்கு என்னவென்று சொல்லாமல் மனிதநேயத்துடன் சட்டுன்று உதவிய பெண் உதவி ஆய்வாளர் சுமதி அவர்களுக்கு நீதியின் நுண்ணறிவு சார்பாக வணக்கங்களும் வாழ்த்துக்களும்.