சிதம்பரம், அம்மாபேட்டை சேர்ந்த மாரியப்பன் என்பவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணம் வசூல் செய்யும் பணி செய்து வருபவர். கடந்த 30.5.2024 அன்று இரவு சுமார் 9 மணி அளவில் சீர்காழி பகுதியில் மற்ற கடைகளுக்கு பொருட்கள் கொடுத்த வகையில் தான் வேலை செய்யும் நிறுவனத்திற்கு சேர வேண்டிய தொகை ரூபாய் 10 லட்சத்தை வசூல் செய்து முடித்துவிட்டு சிதம்பரம் செல்வதற்காக ஆயத்தப்பட்டு கடைத்தெருவில் சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர், மாரியப்பன் கையில் வைத்திருந்த பணத்தை அவரிடம் இருந்து பிடுங்கிக் கொண்டு தப்பிச் சென்றனர். இந்த சம்பவத்தை அடுத்து சீர்காழி காவல் நிலையத்தில் உடனடியாக புகார் கொடுக்கப்பட்டது.
புகாரின் பேரில் சீர்காழி ஆய்வாளரின் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு சிசிடிவி காட்சிகள் உதவியுடன் மேற்கொண்ட விசாரணையில், குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் சீர்காழி சேர்ந்த ஜீவா என்பவரின் மகன் பிரேம்குமார் வயது 22 மற்றும் தஞ்சாவூரை சேர்ந்த ஜலாலுதீன் என்பவருடைய மகன் முஹம்மது வயது 19 என்பதும் தெரிய வந்தது. அதை தொடர்ந்து இருவரும் உடனடியாக கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடமிருந்து திருடப்பட்ட பணம் ரூபாய் 10 லட்சம் மற்றும் இந்த சம்பவத்திற்கு ஈடுபடுத்திய இரு சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. குற்ற சம்பவம் நடந்து சுமார் 12 மணி நேரத்திற்குள் குற்றவாளிகளை கைது செய்த சீர்காழி காவல்துறையினருக்கு பொதுமக்கள் சார்பாகவும் நீதியின் நுண்ணறிவு சார்பாகவும் மேலும் பணி சிறக்க வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.