தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் திருச்சிற்றம்பலம் சரகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஏட்டாக பணிபுரியும் இளங்கோ தான் இந்த காவல் நிலையத்தில் கதாநாயகன் நான்கு ஆண்டுகளாக.
திருச்சிற்றம்பலம் சரகத்தில் மணல், கஞ்சா, சீட்டாட்டம், கோவில் திருவிழாக்களில் சூதாட்டங்கள் போன்ற அனைத்து குற்றங்களும் இவரை மீறி எதுவும் செய்யவே முடியாது. இவருக்கு கப்பம் கட்டியதற்கு அப்புறம் தான் செயல்படுத்த முடியும். சீட்டாட்டத்தில் இவருக்கு வாரத்திற்கு மட்டும் ரூபாய் 20000. அதிகாரிகள் ரைடு வந்தால் அதற்கு தனி அமௌன்ட் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு தகவல் தெரிவிக்கும் இந்த அதிகாரி இப்படி நடந்து கொண்டால் மற்ற காவலர்கள் கவனத்திற்கு அது எப்படி தெரியாமல் இருக்கும். தெரிந்திருந்தும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை இதுவரை.
இந்த காவல் நிலையத்தில் இதற்கு முன்னால் இருந்த ஆய்வாளர் ஜெயா இவர் மீது எழும் புகார்களுக்கு பாவம் பார்த்து அறிவுரை மட்டும் கூறியதோடு நிறுத்திக் கொண்டதால் இது தொடர் வியாதியாகி போனது என்று சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் மனவேதனையோடு குமுறுகின்றனர். இவருக்கு என்று ஒவ்வொரு ஏரியாவிலும் மாமூல் வாங்க ஆள் வைத்துள்ளார். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 10,000 இல்லாமல் வீடு திரும்ப மாட்டார் இந்த அதிகாரி. சக காவலர்களையும் மிரட்டுவாராம் இவர். பட்டுக்கோட்டையில் 1 கோடி மதிப்பில் வீடு கட்டியுள்ளார் இவர். கள்ளக்குறிச்சியில் கள்ள சாராயம் குடித்து சுமார் 56க்கும் மேற்பட்டவர்கள் இறந்தனர். உயிர் ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து தமிழகம் முழுவதும் போலீசார் கள்ளச்சாராயம் காய்ச்சும் நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி அவர்களை கைது செய்து வருகின்றனர். மேலும் கள்ள சந்தையில் மதுபானம் விற்பனை செய்யும் நபர்கள் குறித்து அனைத்து போலீஸ் நிலையங்களிலும் விசாரணை நடத்த வேண்டும் என அந்தந்த மாவட்ட துணை போலீஸ் கண்காணிப்பாளருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையம் மதுபான விற்பனை, கள்ளச்சாராயம் குறித்த தகவல்களை மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு முறையாக தகவல் தெரிவிக்காமல் உள்ள போலீசார் கண்டறியப்பட்டு தமிழக முழுவதும் தற்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வரும் தனி பிரிவு ஏட்டு இளங்கோவன், எழுத்தர் சிவா ஆகிய இருவரும் தஞ்சை ஆயுதப்படைக்கு அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர்.
சமீபத்தில் தஞ்சை புதுக்கோட்டை எல்லை கிராமத்தில் போலி மதுபானம் தயார் செய்த கும்பலை தனிப்படை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற அதிகாரிகளுக்கு பதவி ஒரு கேடா? என்று மக்கள் குமுறுகின்றனர். வேலியே பயிரை மேயும் வண்ணமாக இதுபோன்ற அதிகாரிகள் இருக்கும் வரை நேர்மையாக இருக்கும் உயர் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு அவப்பெயர் ஏற்பட்டு கொண்டுதான் இருக்கின்றன. ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்தார் என்றால் விசாரணை அதிகாரி வருவதற்கு முன்பே இருவரையும் சந்தித்து மாமூல் வாங்கிக் கொண்டு சென்று விடுவார். இவர் மீது துறை ரீதியான சட்ட நடவடிக்கை பாயுமா? மாவட்ட கண்காணிப்பாளர் கண்டு கொள்வாரா? பொறுத்திருந்து பார்ப்போம். இவரால் பாதிக்கப்பட்ட நிறைய பேர் குமுறுகின்றனர்.