காவல்துறை கண்களில் மண்ணைத் தூவி விற்கும் நவீன பெட்டிக்கடை மாஃபியாக்கள்….
தென்காசி மாவட்டத்தில் தலை விரித்தாடும் போதை வஸ்துக்களால் தடுக்க முடியாமல் தென்காசி மாவட்ட காவல்துறை திணறும் அளவுக்கு போதை பொருள் விற்பனை மாபியாக்களாக உருவெடுக்கும் பெட்டிக்கடை மற்றும் மளிகை கடை உரிமையாளர்கள் வேகமாக மாறி வருவது எதிர்காலத்தை அச்சுறுத்தும் அபாயம் உள்ளது.
இன்றைய வளர்ந்த காலகட்டங்களில் கூட சட்டத்தின் ஆட்சி அமலில் இருக்கும் போது கூட போதை வஸ்துக்கள் சர்வ சுதந்திரமாக ‘டோர் டெலிவரி’ போன்று மிக நெருங்கிய தெரு கடைகளில் கூட கிடைக்கும் அளவுக்கு சமூகம் சீரழிந்து வரும் நிலை உள்ளது.
குறிப்பாக ஆயக்குடி காவல் சரகத்திற்கு உட்பட்ட சாம்பவர் வடகரை காவல் நிலையம் இயங்கும் ஊரிலேயே ராசாநாடார் மகன் A.R சேர்மன் என்பவர் நடத்தும் மளிகை கடையில் எத்தனை நெருக்கடியான காலகட்டத்திலும் கூட அதாவது காவல்துறை சோதனை நடைபெறும் போது கூட சர்வ சாதாரணமாக பான்பராக், ஹான்ஸ், கூல் லிப், போன்ற போதை வஸ்துக்கள் சில்லறை விற்பனை என்பது அமோகமாக நடைபெறுவதாகவும் இவற்றை கர்நாடக மாநிலம் ஹூலியூர் துர்காவில் உள்ள மொத்த வியாபாரிகள் மூலம் ஸ்டாக்கிஸ்ட்கள், சூப்பர் ஸ்டாக் கிஸ்ட்டுகள் மூலம் கை மாறி இந்தியாவில் உள்ள பிறபகுதிகளுக்கும்
S.V கரையில் இவர் போன்ற பெட்டிக்கடைகளுக்கும் சப்ளை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
அதில் S.V கரை கிராமத்தில் மேற்படி கடையில் 5ரூபாய் பாக்கெட்டுகள் 50 முதல் 60 ரூபாய் வரை விற்கப்படுவதாக சொல்லப்படுகிறது. இவர்கள் விற்கும் தடை செய்யப்பட்ட போதை வஸ்துக்கள் அதிக அளவில் விற்பனை செய்யவும் செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தி அதிக விலைக்கு விற்பனை செய்யவும் இளைஞர்களிடத்தில் குறிப்பாக மாணவர்கள் கட்டுமான கூலி ஆட்கள், லோடுமேன்கள், லாரி, பஸ், ஓட்டுனர்கள் போன்றோர் உரக்கம் களையவும் செயற்கை புத்துணர்வுடன் இருக்கவும் இதனை பயன்படுத்தும் பழக்கத்துக்கு தவறாக அடிமையாகி உள்ளதை தெரிந்து கொண்டுள்ள மொத்த விற்பனை மாபியாக்கள் இதனை சாமானிய தொழிலாளிக்கும் எளிமையாக கிடைக்கும் வண்ணம் கீழ் மட்டம் வரை சென்று விற்பனை செய்ய துணிச்சல் மிக்க பெட்டிக்கடைகாரர்களை தேர்வு செய்து தற்போது இந்த வியாபாரம் வசூலில் கொடி கட்டி பறக்கவே மளிகை கடைக்காரர்களும் இத்தகைய சட்டவிரோத வியாபாரங்களுக்கு துணை போக துவங்கியுள்ளது பெரும் சவாலாக மாறி இருக்கிறது. இவற்றை எவ்வளவோ கட்டுப்படுத்த காவல்துறை பலவிதமான சோதனை நடவடிக்கை மேற்கொண்டாலும் கூட அவர்கள் கண்களில் மண்ணைத் தூவி விட்டு S.V கரையில் இவருக்கு பல ஆயிரங்களை குவிக்கும் வியாபாரமாக மாறி இருப்பது வேதனையிலும் வேதனை…
மேலும் இவர் கடை வீட்டோடு கடையும் இணைந்து அமைந்திருப்பதால் இத்தகைய தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை மிக அதிக அளவில் பதுக்கி வைத்த இவர் வைத்துள்ளதை எவரேனும் புகார் செய்தாலும் எளிதில் அதிகாரிகள் கண்களுக்கு புலப்படாத வகையில் பதுக்கி வைக்க கூடிய வசதி ஏ ஆர் சேர்மன் கடையில் உள்ளது. என்றும் நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. இவர் போன்ற கடைகளுக்கு பலமுறை அபராதம் விதித்தும் அதையெல்லாம் மீறி அசால்டாக மீண்டும் மீண்டும் சட்ட விரோத விற்பனையை அடுத்த சில நாட்களிலேயே சூடுபிடிக்க துவங்கி விடுவதாக போதை வஸ்துக்களை வெறுக்கும் வட்டாரங்கள் மூலம் அறிய முடிகிறது. மேலும் இதனால் சீரழியும் இத்தகைய பொருட்களை உட்கொள்பவர்கள் அல்லது உபயோகிப்பவர்கள் பலதரப்பட்ட உடல்நல பிரச்சனைகள் அதிக அளவில் வருவதற்கு வாய்ப்புள்ளது. அதில் மிக முக்கியமானது புற்றுநோய் அதிலும் வாய் தொண்டை நாக்கு,கண்ணம் மற்றும் உணவுக் குழாய்களில் ஏற்படும் புற்று நோய்களுக்கு இது முக்கிய காரணமாக விளங்குகிறது மேலும் உள் நோய்கள் பற்களில் இனாமல் தேய்வு,பற்கள் கரை மற்றும் சொத்தைகள் உடலில் பக்கவாதம் நெஞ்சுவலி போன்றவை ஏற்படும் என்று மருத்துவ ஆய்வுகள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்தாலும் அரசு இயந்திரம் வெறுமனே பாக்கெட்டுகளில் வாய் புற்றுநோய் புகைப்படம் போட்டால் மட்டும் போதாது இதுபோன்ற விற்பனையாளர்களை இனம் கண்டு முதல் மற்றும் இரண்டாம் தடவை அடுத்து மீண்டும் மீண்டும் இதே குற்றங்களில் ஈடுபட்டால் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குதல் போன்ற நடவடிக்கைகள் எடுத்தால் ஒழிய இவற்றை கட்டுப்படுத்துவது என்பது காவல்துறை மட்டுமல்ல ராணுவத்தினாலே கூட தடுக்க முடியாத காரியமாக மாறும் என்பதே நிதர்சனம் நிறைந்த உண்மை…
இதுபோன்று தென்காசி மாவட்டத்தில் உள்ள பல ஊர்களில் கிராமங்களில் விற்பனை செய்யப்படுகிறது…
அடுத்த இதழில்…
– ஆர்.பூவையா, தென்காசி.