மயிலாடுதுறை மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த 01- துணைக்காவல் கண்காணிப்பாளர், 01- ஆய்வாளர், 04 உதவி ஆய்வாளர்கள், 13- காவல் ஆளிஞர்களுக்கு தமிழ்நாடு காவல் துறை இயக்குநர் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் சுருக்குமடி வலை பிரச்சினையின் போது எந்தவித நிகழ்வும் ஏற்படாமல் சிறப்பாக சட்டம் ஒழுங்கை மேற்கொண்ட T.A.J.லாமெக், மதுவிலக்குஅமல்பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளருக்கும், மயிலாடுதுறை காவல் நிலைய சரகத்தில் உள்ள மூத்த குடிமக்களை சந்தித்து அவர்களது தேவையை கேட்டறிந்து, தேவைகளை பூர்த்தி செய்து சிறப்பாக செயல்பட்டதற்காக திருமதி சுப்ரியா, மயிலாடுதுறை காவல் ஆய்வாளருக்கும், சரித்திர பதிவேடு குற்றவாளிகள், நீண்ட நாட்களாக பிடிக்கட்டளை நிலுவையில் இருந்த குற்றவாளிகளை பிடித்தும், கஞ்சா பொருட்களை கைப்பற்றியதற்காக அறிவழகன், உதவி ஆய்வாளர் மற்றும் தனிப்படையினருக்கும், மயிலாடுதுறை உட்கோட்டத்தில் திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்ட எதிரிகளை கைது செய்து, வழக்கில் களவு போன நகைகளை எதிரிகளிடம் இருந்து மீட்டதற்காகவும், COTPA பொருட்களை கைப்பற்றியதற்காகவும், சரித்திர பதிவேடுகள் குற்றவாளிகளை பிடித்தமைக்காகவும் உதவி ஆய்வாளர் இளையராஜா ஆத்மநாபன் மற்றும் தனிப்படையினருக்கும், சீர்காழி உட்கோட்டத்தில் திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்ட எதிரிகளை கைது செய்து களவு போன நகைகளை மீட்டதற்காகவும், மதுவிலக்கு குற்றத்தில் ஈடுபட்ட நபர்களை பிடித்தற்காக உதவி ஆய்வாளர் மணிகண்ட கணேஷ் மற்றும் அவரது தனிப்படையினருக்கும், காரில் மதுபானங்களை கடத்தி வந்த நபர்களை பிடித்த மங்களநாதன், உதவி ஆய்வாளருக்கும் மற்றும் நீதிமன்றத்தில் உள்ள வழக்கின் எதிரிகளுக்கு தண்டனை பெறுவதற்கு சிறப்பாக பணிபுரிந்த தலைமை காவலர் திருமதி வாலண்டினா ஆகியோருக்கு தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் / படைத்தலைவர் அவர்கள் 27.07.2024ம் தேதி பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் திருச்சி மண்டல காவல் துறை தலைவர், தஞ்சாவூர் சரக காவல் துறை துணைத் தலைவர், மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடன் இருந்தனர்.