மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.ஸ்டாலின் நாமக்கல் மாவட்டம் குற்ற பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய போது திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில் SC/ST வன்கொடுமை சட்டம் 1989 பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் புலன் விசாரணையை மேற்கொண்டார்.
மேற்கண்ட வழக்கானது கோகுல்ராஜ் என்ற பட்டியலினத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி மாணவனை பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த “தீரன் சின்னமலை பேரவை” நிறுவன தலைவர் யுவராஜ் பிற குற்றவாளிகளுடன் சேர்ந்து கடத்திச்சென்று கொலை செய்த வழக்காகும். இந்த வழக்கின் புலன் விசாரணை மேற்கொண்டு வழக்கின் குற்றப்பத்திரிக்கையை உரிய கால வரம்பிற்குள் தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வழக்கினை விசாரணை செய்த மதுரை மாவட்ட சிறப்பு நீதிமன்றம் இவ்வழக்கின் முக்கிய எதிரியான யுவராஜிற்கு 3 ஆயுள் தண்டனையும் (சாகும் வரை) மற்ற 9 குற்றவாளிகளுக்கு 2 மற்றும் 1 ஆயுள் தண்டனையும் (சாகும் வரை) விதித்து தீர்ப்பளித்தது. மேலும் உயர்நீதிமன்றமும் மேற்கண்ட தண்டனைகளை உறுதி செய்தது. முக்கியத்துவம் வாய்ந்த இவ்வழக்கை புலன் விசாரணை மேற்கொண்டு எதிரிகளுக்கு தண்டனை பெற்று தந்த G.ஸ்டாலின் தற்பொதைய மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு தமிழ்நாடு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் சிறந்த புலனாய்விற்கான 2022-ம் ஆண்டிற்கான தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.
மேலும் மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் T.பாலச்சந்திரன் அவர்கள் தனிப்பிரிவில் சிறப்பாக பணியாற்றியமைக்காக மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் சிறந்த காவலருக்கான தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.