04, 12 2024 ஆம் தேதி காலை சுமார் 10 மணி அளவில் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம் அருகே ராஜாஜி சாலையில் கிழிந்த ஆடை உடுத்தி அங்கு சுற்றித் திரிந்து கொண்டிருந்த சுமார் 28 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு பெண்மணி திருமதி தேவி என்பவரை பி3 கோட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு கருப்பையா சண்முகசுந்தரம் உதவி ஆய்வாளர் திரு குணசேகரன் மற்றும் காவலர் தாமோதரன், பெண் காவலர்கள் திருமதி ஹேமலதா மற்றும் செல்வி திவ்யா ஆகிய இவர்கள் மேற்படி பெண்ணை அழைத்து வந்து தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம் எதிரில் உள்ள பொதுமக்களின் ஒப்பனை அறையில் குளிக்கச் சொல்லி புது ஆடை அணிவித்து பின்னர் பி3 கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் திரு முகேஷ் ராவ் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் தமிழ்நாடு காவல்துறையின் காவல் கரங்கள் என்ற அமைப்பிற்கு தொடர்பு கொண்டு உதவிடக் கூறியதன் பேரில் அகல் பவுண்டேஷன் தொண்டு நிறுவனம் மூலமாக சென்னை பெருநகர மாநகராட்சி பெண்கள் மனநல காப்பகம் எழும்பூர் சென்னை 8 என்ற பராமரிப்பு இல்லத்திற்கு சிகிச்சைக்காக முறைப்படி பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பொதுமக்கள் சிலரும் காவல்துறையினருக்கு உதவியாக செயல்பட்டு மேற்கண்ட மனநலம் பாதிக்கப்பட்ட திருமதி தேவி என்பவரை மேற்படி அரசு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.