புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.வந்திதா பாண்டே இ.கா.ப., அவர்களின் உத்தரவின்பேரில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நமணசமுத்திரம், பனையப்பட்டி, கே.புதுப்பட்டி மற்றும் அறந்தாங்கி ஆகிய காவல் சரகத்தில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட எதிரிகளை பிடிக்க தனிப்படை அமைத்த நிலையில், தனிப்படை காவல்துறையினர் அதிரடியாக செயல்பட்டு வெவ்வேறு இடங்களில் வழிப்பறியில் ஈடுபட்ட 3 எதிரிகளை கைது செய்து அவரிடமிருந்து 27 பவுன் தங்க நகைகள் மற்றும் 3 இருசக்கர வாகனங்களை கைப்பற்றப்பட்டு எதிரிகளை சிறையில் அடைத்தனர். மேலும் எதிரிகளை விரைவாக பிடிக்க உதவியாக இருந்த தனிப்படையினரை புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரடியாக அழைத்து வெகுவாக பாராட்டினார்கள்…