Dr.K.கார்த்திகேயன்,இ.கா.ப., அவர்கள் உத்தரவிட்டதன் பேரில், தனிப்படைகள் அமைக்கப்பட்டு புலன்விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் நேற்று (13.12.2024) மைலம்பட்டி பகுதி சேர்ந்த முருகேசன் மகன் கணேசன் (40) , ஊட்டி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜரத்தினம் மகன் ரகுநாத் (27) மற்றும் பீளமேடு பகுதியை சேர்ந்த மலையப்பன் மகன் கார்த்திக் (19) ஆகியோர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் மேற்படி வழிப்பறி வழக்கில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர். இந்நிலையில் மேற்படி நபர்களை கைது செய்து மேற்படி வழக்குகளின் சொத்துக்களான செல்போன்-1, ரூபாய் 300/- மற்றும் ஆட்டோ-1 ஆகியவற்றை பறிமுதல் செய்தும், மேலும் சூலூர் காவல் நிலைய பகுதியில் மற்றொரு வழிப்பறி வழக்கில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இந்நிலையில் மேற்படி வழிப்பறி வழக்கின் சொத்துக்களான 2¼ சவரன் தங்க நகையையும் பறிமுதல் செய்து, மேற்படி நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்
கோவை மாவட்டம், பேரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தனியாக செல்லும் பெண்களிடம் சங்கிலி பறிப்பு வழக்கில் ஈடுபட்ட தங்கவேல் மகன் ஞானவேல் @மதன் குமார் (30) என்பவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்நபரை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் Dr.K.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள் பரிந்துரை செய்தார்.
அப்பரிந்துரையின் பேரில், கோவை மாவட்ட ஆட்சியர் திரு.கிராந்தி குமார் பாடி, இ.ஆ.ப., அவர்கள் மேற்கண்ட நபர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். மேற்படி உத்தரவின்படி வழிப்பறி வழக்கு குற்றவாளியான ஞானவேல்@மதன்குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.
மேலும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை தொடரும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்
இந்த வருடத்தில் இதுவரை கோவை மாவட்டத்தில் 72 நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
சட்டத்திற்கு புறம்பாக குற்ற செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.
குற்றங்களை தடுத்திட பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். தயங்காமல் அழைத்திடுங்கள் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்சப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்