தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் உட்கோட்டம் பந்தநல்லூர் காவல் நிலைய பகுதிக்குட்பட்ட கரூப்பூர் கீழத்தெரு பகுதியில் சட்ட விரோதமாக பாண்டிச்சேரி மாநில மது பாட்டில்கள் கடத்தி வந்து விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பந்தநல்லூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி. கவிதா அவர்கள் தலைமையிலான காவலர்கள் அடங்கிய குழு மேற்படி இடத்திற்கு சென்று தீவிர சோதனை மேற்கொண்டதில் சுமார் 1700 பாண்டிச்சேரி மாநில சாராய பாட்டில்கள் கைப்பற்றப்பட்டு குற்றவாளிகளான கரூப்பூர் மேலத்தெருவைச் சேர்ந்த கலியபெருமாள் மற்றும் சுமதி ஆகியோர் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டனர்