சென்னையில் உள்ள சாந்தோம் பகுதியில் ஆரம்ப சுகாதார மையம் ஒன்று பல வருடங்களாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.
அங்கு பல் மருத்துவம் மகப்பேறு மருத்துவம், குழந்தைகள் மருத்துவம் என்று பல மருத்துவ சிகிச்சை முறைகள் கையாளப்படுகிறது, மருத்துவமனைக்கு தேவையான சிறிய ஆய்வகக்கூடமும் அங்கே உள்ளன. பல லட்சம் மதிப்புள்ள மருந்து பொருட்களும் மருத்துவ உபகரணங்களும் அங்கேயே சேகரித்து வைக்கப்படுகிறது.
அதன் மேற்கூறை சரியாக கட்டப்படாத காரணத்தினால் மழை நேரங்களில் மேற்கூறையில் இருந்து மழை நீர் நேரடியாக கட்டிடத்திற்குள் வந்து அங்குள்ள மருத்துவ உபகரணங்களும் மருந்து பொருட்களும் சேதம் அடையும் நிலை உருவாகியுள்ளது.
மேற்கூறையில் இருந்து கசியும் நீரால் மின்சாரம் தாக்கும் அபாயமும் காணப்படுகிறது. சேதத்தை தவிர்க்க அங்குள்ள மருத்துவர்களும் , பணியாளர்களும் இந்த பல லட்சம் மதிப்புள்ள மருந்து பொருட்களையும் ,மருத்துவ உபகரணங்களையும் பாதுகாக்க வெவ்வேறு இடங்களில் வைக்கின்றன,மக்களும் மிகுந்த சிரமத்துக்குள் ஆகின்றனர். இந்த அவல நிலையை அரசு கண்டு கொள்ளுமா ?மக்களின் வரிப்பணம் காப்பாற்றப்படுமா?