தென்காசி மாவட்டம், செங்கோட்டை காவல் நிலைய கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளியான சுந்தரபாண்டியபுரம் முத்தையா என்பவரின் மகன் சுடலை மணிகண்டன், பாவூர்சத்திரம் காவல் நிலைய கொலை முயற்சி மற்றும் ஆயுத தடை சட்ட வழக்கின் குற்றவாளியான எல்லைப்புளி ஐயப்பன் என்பவரின் மகன் பாலாஜி 20, புளியங்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போக்சோ வழக்கின் குற்றவாளிகளான திருவேட்டநல்லூர் கற்பகநாச்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அருணாச்சலம் என்பவரின் மகன் ராமர் 43 மற்றும் அய்யாபுரம் அரண்மனை தெருவை சேர்ந்த ரத்தினசாமி என்பவரின் மகன் செல்லசாமி 41 ஆகியோர் மீது பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு S. அரவிந்த் அவர்கள் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் திரு.ஏ.கே.கமல் கிஷோர் இ.ஆ.ப., அவர்கள் உத்தரவின் பேரில் மேற்படி நான்கு நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
