திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி, தேசூர் பகுதியைச் சேர்ந்த சக்ரவர்த்தி, வ/41, த/பெ.சிங்காரவேலு என்பவர் பி.இ எலக்ட்ரிக்கல் என்ஜினியரிங் படித்து முடித்துள்ளார்.
கடந்த 2020ம் ஆண்டு சக்ரவர்த்தியின் நண்பர் மூலம் அறிமுகமான இராமாபுரம் பகுதியைச்சேர்ந்த அஞ்சுகம் என்பவர், மேற்படி சக்கரவர்த்தியிடம் அரசுத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி 6 தவணைகளாக ரூ.9.5 லட்சம் பணம் பெற்றுள்ளார். ஆனால் பேசியபடி வேலை வாங்கித்தராமலும், பணத்தை திரும்ப தராமலும் அஞ்சுகம் ஏமாற்றி வந்துள்ளார்.
இது குறித்து சக்ரவர்த்தி காவல் ஆணையாளர் அலுவலகத்தில் கொடுத்த புகாரின் பேரில் R-10 எம்.ஜி.ஆர் நகர் காவல் நிலைய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
R-10 எம்.ஜி.ஆர் நகர் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர், தீவிர விசாரணை செய்ததில் புகார்தாரர் குறிப்பிட்டிருந்தது உண்மையென தெரியவந்ததின்பேரில், ரூ.9.5 லட்சம் பணத்தை பெற்று மோசடி செய்த எதிரி அஞ்சுகம், பெ/49, திருமலைநகர், இராமாபுரம், சென்னை என்பவரை (03.09.2025) கைது செய்தனர். மேலும் விசாரணையில் அஞ்சுகம், இராமாபுரம் பகுதியில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருவது தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட எதிரி அஞ்சுகம் விசாரணைக்குப் பின்னர் (03.09.2025) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.
