புகார்தாரர் சுப்பிரமணி, ஆ/வ.55, த/பெ.பெரியசாமிபிள்ளை என்பவர் கடந்த 11.08.2025ம் தேதி மடிப்பாக்கம் கிராமம் கீழ்கட்டளை பகுதியில் உள்ள அவரது சொத்தை புகார்தாரர் இறந்து விட்டதாக கூறி புகார்தாரின் பெயரில் இறந்து போன மற்றொரு நபரின் இறப்பு சான்றிதழை பெற்று அதன் மூலம் பிரியா என்ற நபர் ஆள்மாறாட்டம் செய்து அவர் மட்டுமே புகார்தாரருக்கு வாரிசு என்று புகார்தாரரின் மடிப்பாக்கம், கீழ்கட்டளையில் உள்ள ரூ.2 கோடி மதிப்புள்ள 2,530 ச.அடி. சொத்தை விற்பனை செய்து சுயலாபம் அடைந்துள்ளார் எனவும், ஆள்மாறாட்டம் செய்த பிரியா க/பெ.தீனதயாளன் என்ற நபரையும் அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு சென்னை பெருநகர காவல் ஆணையாளரிடம் கொடுக்கப்பட்ட புகார் மனுவினை வழிவழியாக பெறப்பட்டு கடந்த 09.09.2025ம் தேதி மத்திய குற்றப்பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, புலன் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.


இவ்வழக்கு சம்மந்தமாக துரித நடவடிக்கை எடுத்து வழக்கின் எதிரிகளை கைது செய்து, பாதிக்கப்பட்ட நபருக்கு உரிய சட்டத்தின் மூலம் நீதி பெற்று தந்திட சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.ஆ.அருண், இ.கா.ப., அவர்களின் உத்தரவின்பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் காவல் ஆணையாளர் திருமதி.ஏ.ராதிகா, இ.கா.ப., அவர்களின் வழிகாட்டுதலின்பேரில், காவல் துணை ஆணையாளர் திருமதி.வி.வி.கீதாஞ்சலி அவர்களின் மேற்பார்வையில், போலி ஆவண புலனாய்வு பிரிவு (Forgery Investigation Wing) உதவி ஆணையாளர் செல்வி.காயத்ரி, காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் கொண்ட தனிப்படை அமைத்து, உரிய விசாரணை மேற்கொண்டு, குற்ற நிகநழ்வினை உறுதி செய்து, எதிரிகளை தேடி வந்த நிலையில், கே.கே.நகர் பகுதியை சேர்ந்த எதிரி பிரியா, வ/32, க/பெ.தீனதயாளன் என்பவரை 25.09.2025ம்தேதி கைது செய்தும், அவரது வாக்குமுலத்தின் தகவலின்படி, பிரியாவுக்கு தெரிந்த சில நபர்கள் மூலம் புகார்தாரரின் பெயரில் இறந்து போன மற்றொரு நபரின் இறப்பு சான்றிதழை பெற்று அதன் மூலம் எதிரி பிரியாவை புகார்தாரரின் மகள் போன்று ஆள்மாறாட்டம் செய்து எதிரி பிரியா மட்டுமே புகார்தாரருக்கு வாரிசு என்று போலியாக வருவாய் துறை வாரிசு சான்றிதழ் பெற்று புகார்தாரரின் இடத்தை அபகரித்துள்ளார்கள் என்பது தெரியவந்தது.
இந்நிலையில், மேலும் இவ்வழக்கில் இடைத்தரகர்களாக இருந்து போலி ஆவணங்களை தயார் செய்து கொடுத்த எதிரிகளான ஜமின் பல்லாவரத்தைச் சேர்ந்த பாலசுந்தர ஆறுமுகம், ஆ/வ.40, மற்றும் வானுமாம்பேட்டையைச் சேர்ந்த சாலமன்ராஜ் ஆ/வ.38 ஆகியோரை தனிப்படையினர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் தேடி வந்த நிலையில், தகுந்த புலன் வைத்து, முறையே திருச்சி மற்றும் படப்பை பகுதியில் கடந்த 02.10.2025ம் தேதி கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
மேலும் இவ்வழக்கு சம்மந்தப்பட்ட மற்ற எதிரிகளை கைது செய்ய வேண்டி எதிரிகளை தேடி வருகின்றனர்.
மேலும் நிலம் வாங்கும் போது பொதுமக்கள் நிலத்தின் தாய் பத்திரங்களை சரிபாரத்து, உரிய சரிபார்த்தலுக்கு பின்பு வர்த்தக பரிவர்த்தனை செய்திடவும், சென்னை பெருநகர காவல்துறை மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
