போலி லோன் விளம்பரங்கள் மூலம் சைபர்மோசடியில் ஈடுபட்ட நபர்களை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப., அவர்களின் உத்தரவின்பேரில் சைபர்கிரைம் காவல் ஆய்வாளர் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படையினர் கைது செய்தனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மூன்று நபர்களும் பொதுமக்களோட செல் நம்பருக்கு எஸ்எம்எஸ் மூலமாக குறைந்த வட்டியில் 1%க்கு 1 லட்சம் முதல் 10 லட்சம் வரை லோன் பெற கீழ்க்கண்ட போன் நம்பனை அணுகவும் என சொல்லிட்டு பல்க் மெசேஜை அனுப்பிவிடுகிறார்கள். அதை படித்து பார்க்கும் பொதுமக்கள் அந்த நபர்களை காண்டாக்ட் பண்ணும் போது முதலில் டாக்குமெண்ட் வெரிஃபிகேஷன் என கூறி ஆதார் கார்டு, பான் கார்டு, பேங்க் பாஸ்புக் அனுப்ப சொல்லி வாட்ஸ்அப் அனுப்ப சொல்லி ஒரு நம்பர் கொடுக்கிறார்கள். அந்த வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்புன பிறகு அடுத்த நாள் அந்த நபர்கள் போன் பண்ணி உங்களுக்கு லோன் வாங்குறதுக்கு எலிஜிபில் இவ்வளவு என்று சொல்லி பிராசசிங் பீஸ் வேணும் சொல்லி அவங்க அக்கவுண்ட் நம்பர் கொடுத்து அமௌண்ட் போட சொல்றாங்க.. அமௌண்ட் போட்டதுக்கு அப்புறம் ரெண்டு மாசத்துல பிராசசிங் லோன் பிராசசிங்க்ல இருக்குனு சொல்றாங்க.. ரெண்டு மாசம் கழிச்சு அவங்க போன் நம்பரை சுவிட்ச் ஆஃப் பண்ணிடுறாங்க இவங்க அவங்கள காண்டாக்ட் பண்ண முடியல லோன் வாங்கவும் முடியலை.. கொடுத்த பணத்தை ரிட்டர்ன் கேட்கவும் அவங்கள தொடர்பு கொள்ள முடியல. இதுபோல அவங்க எந்தெந்த நம்பர் யூஸ் பண்றாங்க அப்படினா பிரதமர் மோடியோட முத்ரா லோன், தனலட்சுமி தனிநபர் கடன், கேப்பிட்டல் பைனான்ஸ் அப்படிங்கற பெயர் யூஸ் பண்ணி அவங்க டிபி ப்ரோபைலையம் இந்த நேம்ல வச்சு அவங்க நம்புறது மாதிரி ஆசை வார்த்தை கூறி லோன் தர்றோம் சொல்லிட்டு ஏமாத்திராங்க.. இதுபோல குறைந் வட்டியில் லோன் தரேன்னு சொல்லியோ அல்லது பார்ட் டைம் ஜாப், ஷேர் மார்க்கெட் முதலீடு பண்ண டபுள் ஆக்கி தரோம் என்று சொல்லியோ இல்ல பேங்க்ல இருந்து பேசுறோம்.. அப்டேட்க்காக OTP கேட்டாலும் யாரும் தரவேண்டாம். இதுபோல மெசேஜ், எஸ்எம்எஸ் மூலமாக இதுல எதுல வந்தாலும் லிங்க் கிளிக் பண்ண வேணாம்.. அப்படி கிளிக் பண்ணி பணம் ஏதும் லாஸ் ஆயிடுச்சுனா உடனே 1930 என்ற நம்பருக்கு தொடர்பு பண்ணி சொல்லவும். அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கவும்.
மேலும், சமூக வலைதளங்களை பயன்படுத்தி இதுபோன்ற போலி விளம்பரங்கள் மூலம் மோசடியில் ஈடுபடும் நபர்கள் கூறும் ஆசை வார்த்தைகளை நம்பி பொதுமக்கள் யாரும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என திருச்சி மாவட்ட காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
