தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தலைமையில் கனிமவள லாரி உரிமையாளர்கள் மற்றும் கிரஷர் உரிமையாளர்களுடன் வாகன விபத்துகளை தவிர்த்தல் மற்றும் கால / வேக வரையறைகளை வாகனங்கள் தவறாது பின்பற்றுதல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
மேற்படி ஆலோசனை கூட்டத்தில் 1) திரு. செ. அரவிந்த், காவல் கண்காணிப்பாளர், தென்காசி. 2) திரு. N.சரவணபவன், வட்டார போக்குவரத்து அலுவலர், தென்காசி. 3) திரு. T.வினோத், உதவி இயக்குநர், புவியியல் மற்றும் சுரங்க துறை, தென்காசி. 4) திரு. செ.தமிழ் இனியன், காவல்துணை கண்காணிப்பாளர், தென்காசி உட்கோட்டம் 5) திரு.S. கிளாட்சன் ஜோஸ், காவல்துணை கண்காணிப்பாளர், ஆலங்குளம் உட்கோட்டம் 6) திரு. ஆ.வெங்கடசேகர், வட்டாட்சியர், செங்கோட்டை வட்டம் ஆகியோரும் மற்றும் 1) அனைத்து கிரஷர் உரிமையாளர்கள் 2) இந்தியன் டிரைவர் சொசைட்டி செயலாளர் 3) செங்கோட்டை லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
மேற்படி கூட்டத்தில் கால வரையறை மற்றும் வேக வரையறை பற்றி எடுத்துரைக்கப்பட்டது. காலை 6 மணி முதல் 11 மணி வரையும் மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் தென்காசி மாவட்டத்தின் எந்த பகுதியிலும் கனிமவள லாரிகள் நுழைய கூடாது கனிமங்கள் ஏற்றிச் செல்லும் லாரிகள் மேல் பகுதியில் மூடி செல்லவேண்டும் உட்பட பல கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டது. அதை மீறும்பட்சத்தில் வாகன ஓட்டுநர் மற்றும் கிரஷர் உரிமையாளர்கள்/நடத்துனரும் பொறுப்பாவர் என்பது எடுத்துரைக்கப்பட்டது.
