தமிழ்நாடு காவல்துறையின் சிறந்த காவல் நிலையங்களுக்கான மாநில அளவிலான தரவரிசையில், திருப்பூர் மாநகர வடக்கு காவல் நிலையம் இரண்டாவது இடம் பெற்று பெருமை சேர்த்துள்ளது. “எண்ணித் துணிக கருமம் – விடாமுயற்சி இன்று வெற்றியாக மாறியுள்ளது” என்ற வாசகத்தை நிஜமாக்கும் வகையில், இந்த சாதனை காவல் துறையின் அர்ப்பணிப்பையும் ஒழுங்கையும் வெளிப்படுத்துகிறது.
திருப்பூர் மாநகரம் தொடர்ந்து நான்காவது முறையாக தமிழக முதல்வர் அவர்களின் சிறந்த காவல் நிலைய விருதைப் பெற்றுள்ளது. இதில், வடக்கு காவல் நிலையம் மட்டும் மூன்றாவது முறையாக இந்த உயரிய அங்கீகாரத்தைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
வடக்கு காவல் நிலையத்தின் காவல் ஆய்வாளர் பிரேமா அவர்கள், “பெண்களுக்கெதிரான குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கி வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார். பெண்களுக்கெதிரான குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் தொடர்பான வழக்குகளில் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு, குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்றங்களில் தண்டனை பெற்றுத் தந்ததன் மூலம், இந்த காவல் நிலையம் சிறந்த சாதனையைப் பதிவு செய்துள்ளது.
பெண்களும் புலப்பெயர் தொழிலாளர்களும் அதிகம் வசிக்கும் திருப்பூர் மாநகரத்தில், அவர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கி, சட்ட ஒழுங்கை சிறந்த முறையில் பராமரித்து வருவது வடக்கு காவல் நிலையத்தின் தனித்த அடையாளமாக விளங்குகிறது.
இந்த வெற்றிக்காக திருப்பூர் மாநகர காவல்துறைக்கும், வடக்கு காவல் நிலையத்தின் அனைத்து அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கும் நீதியின் நுண்ணறிவு சார்பில் மனமார்ந்த வாழ்த்துகள்.
