புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் உட்கோட்டம் கோட்டைப்பட்டினம் காவல் சரகத்தில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ரவீந்திர குமார் இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் தனிப்படை போலீஸ் அமைத்து அதிரடியாக சோதனை நடத்தி ரூ.75,00,000 (ரூபாய் எழுபத்தைந்து இலட்சங்கள்) மதிப்புள்ள 150 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து மணமேல்குடி மேலஸ்தானத்தை சேர்ந்த ஒரு எதிரியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.
