தஞ்சாவூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் (03.06.2026) அன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் Indian Bank, Indian Overseas Bank, State Bank, Central Bank of India, City Union Bank, Bank of Maharastra, India Post Payments, Karnataka Bank, Bank of Baroda, Union Bank of India, IDB Bank Ltd, Punjab National Bank, Fedaral Bank, Canara Bank, DBS Bank, Bank of India, Cooperative Bank, HDFC Bank, Equitos Bank உள்ளிட்ட வங்கி மேலாளர்களுடன் இணைய வழி குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஏ.சுந்தரவதனம்..இ.கா.ப அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், இணைய வழி குற்றப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. பாரதிதாசன், காவல் ஆய்வாளர்கள், உதவி காவல் ஆய்வாளர்கள் மற்றும் இணைய வழி குற்றப் பிரிவு காவல் குழுவினர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தற்போது அதிகரித்து வரும் Digital Arrest, Investment Fraud, Trading Scam, OTP மோசடி, Mule Account மோசடி, சமூக வலைதள மோசடிகள் உள்ளிட்ட இணைய வழி குற்றங்களைத் தடுப்பது மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
அப்போது பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள், Digital Arrest தொடர்பான மோசடிகளில் பெரும்பாலும் ஓய்வூதியம் பெறும் மூத்த குடிமக்கள் பாதிக்கப்படுவதால், அவர்களிடையே வங்கிகள் மூலம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை சார்பில் வழங்கப்படும் இணைய வழி குற்ற விழிப்புணர்வு பதாகைகள்,எச்சரிக்கை அறிவிப்புகள் மற்றும் விழிப்புணர்வு தூண்டுப் பிரசுரங்களை அனைத்து வங்கிகளிலும் பொதுமக்கள் எளிதில் காணக்கூடிய இடங்களில் காட்சிப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
இணையவழி மோசடிகளால் பாதிக்கப்பட்டு பதற்றத்துடன் வங்கிகளுக்கு வரும் பொது மக்களை வங்கி ஊழியர்கள் கனிவுடனும் பொறுப்புடனும் அணுகி அவர்களுக்கு உரிய வழிகாட்டுதலை வழங்குவதுடன் சந்தேகத்திற்கிடமான பண பரிவர்த்தனைகள் குறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிப்பதற்கான நடைமுறைகள் குறித்து வங்கி அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தேவையான பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இணையவழி குற்றங்களை தடுப்பதில் காவல்துறையும் வங்கிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியம் குறித்து கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. பொதுமக்கள் இணையவலி குற்றங்களுக்கு ஆளானால் உடனடியாக 1930 என்ற தேசிய இணையவழி குற்ற உதவி என்னை தொடர்பு கொள்ளவோ அல்லது www.cybercrime.gov.in இணையதளத்தில் புகார் அளிக்கவோ கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
