ஒரு நாட்டின் மனித வளத்தில், மக்கள் தொகையில் பெண்கள் பாதி பேர் இருக்கிறார்கள் ஆனால் அந்தப் பெண்கள் பன்னெடுங்காலமாகவே வீட்டை விட்டு வெளியில் வராமல் சமையல் வேலை வீட்டு வேலை என்ற குறுகிய வட்டத்தில் அடைக்கப்பட்டு இருந்தனர். சமீப காலங்களில் பெண்கள் கல்வி கற்க அதிக அளவில் வெளிவருவதும் உயர் கல்வியில் சிறந்து விளங்குபவர்களாகவும் பல்வேறு தனியார் துறையில் தங்கள் திறமைகளை நிரூபித்து இடைநிலை பகுதிகள் வரை ஓரளவுக்கு முன்னேறி வருகின்றனர்.
நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் பெண்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். நாடு எதிர்கொள்ளும் பல்வேறு சிக்கல்களை கலைந்து ஒரு நாட்டை முன்னேற்றுவதற்கான மகத்தான ஆற்றல் பெண்களிடம் உள்ளது.
நிர்வாகத்தில் பெண்களின் நிலையை பரவலாகக் கண்டறிய உயர்கல்வி, பெருநிறுவனத் துறை மற்றும் தேசிய, சர்வதேச அமைப்புகளில் பெண் நிர்வாகிகளின் பங்களிப்புக்கு அங்கீகாரம் வழங்கி ஊக்குவித்து ஆதரிப்பது மிகவும் முக்கியமானது. அதிக எண்ணிக்கையில் பெண்கள் இருந்தபோதிலும், உயர்கல்வி மற்றும் முக்கிய துறைகளில் நிர்வாகப் பதவிகளை வகிப்பது அரிதாகவே காணப்படுகிறது . இதை மாற்றுவதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் தமிழகத்தில் புதிதாக ஆட்சிக்கு வந்த தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஏராளமான பெண்கள் பெருவாரியான ஆதரவளித்தனர். அந்த பெண்களுக்கு அங்கீகாரம் வழங்குவது போல், முதல்வர் விஜய் அவர்கள், மாவட்ட நிர்வாக பணிகளை மேற்கொள்ளும் மாவட்ட ஆட்சியர் பணியிடங்களை இதுவரை தமிழக வரலாற்றில் இல்லாத அளவிற்கு 13 பெண் மாவட்ட ஆட்சியர்களை நியமித்து சாதனை புரிந்துள்ளார்.
பேசாமல் அமைதியானவராக ஆனால் மக்களின் தமிழக முதல்வர் விஜய் அவர்கள் அதிகம் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் வெளியே சொல்லிக் கொள்ளாமல் ஏராளமான நடவடிக்கைகளை அமைதியாக எடுத்து வருகிறார். அந்த வகையில் இதுவரை தமிழக வரலாற்றிலேயே இல்லாத அளவில் 13 பெண் மாவட்ட ஆட்சியர்களை நியமித்து நிர்வாகம் நடைபெற நடவடிக்கை எடுத்துள்ளார்.
