மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் புதிய வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.
புதியதாக தோற்றுவிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிய வருவாய் கோட்ட அலுவலகம் சீர்காழியில் கடந்த 27 ஆம் தேதி முதல் சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வந்தது.
இந்நிலையில், வியாழக்கிழமை முதல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் தனி கட்டடத்தில் செயல்பட தொடங்கியுள்ளது. இந்நிகழ்வில் சீர்காழி வருவாய் கோட்டத்தின் முதல் வருவாய் கோட்ட அலுவலர் நாராயணன், வருவாய்க் கோட்ட அலுவலரின் நேர்முக உதவியாளர், வட்டாட்சியர் சண்முகம், சீர்காழி வட்டாட்சியர் ஹரிதரன், சீர்காழி குடிமைப்பொருள் வழங்கல் தனி வட்டாட்சியர் முருகேசன், தரங்கம்பாடி குடிமைப்பொருள் வழங்கல் அலுவலர் பாபு, சீர்காழி மண்டல துணை வட்டாட்சியர்கள் ரவிச்சந்திரன், விஜயராணி, தலைமையிடத்து துணை வட்டாட்சியர் ரஜினி, சீர்காழி தாலுக்கா மற்றும் வருவாய் கோட்ட அலுவலகத்தின் வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் சீர்காழி மற்றும் தரங்கம்பாடி கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலர் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சீர்காழி வருவாய் கோட்ட அலுவலர் நாராயணன் கூறுகையில் புதியதாக தோற்றுவிக்கப்பட்ட சீர்காழி கோட்டத்தில் பொதுமக்கள் தங்களுடைய குறைகளை மேற்படி அலுவலகத்தில் அனுகி மனுக்களாக அளித்து குறைகளை சரிசெய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.ADVERTISEMENTnullTags :SirkazhiNew Revenue Collector’s OfficeADVERTISEMENTnull