எவ்வளவு கடினமான கஷ்டங்கள் வந்தாலும் காவல்துறையை நாம் விட்டு விலகிடக்கூடாது,
காரணம் இதுதான் முகமறியாதவர்களுக்கு நம்மால் முடிந்தளவு உதவிட முடியும் .அவர்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றிட முடியும்.
இன்று மாலை தற்செயலாகத்தான் பார்த்தேன்.வாட்ஸப்பில் எனக்கு வந்த ஒரு செய்தியை ,யாரென்று தெரியாது இருப்பினும் அவரது கோரிக்கையில் நியாயம் இருப்பதாக உணர்ந்தேன் வாழ்க்கையில் விரக்தியின் எல்லைக்கு சென்று கொண்டிருக்கின்றார் என்பதை உணர்ந்தேன்,எப்படியேனும் உதவிட வேண்டும் என்கின்ற எண்ணத்தில் பதிலுக்கு வாட்ஸப்பில் ஆறுதல் வார்த்தைகூறி உதவிட முயற்சிக்கிறேன் என்று.வாய்ஸ்மெசேஜ் அனுப்பினேன் ,
ஏற்கனவே எனக்கு அறிமுகமான மனிதாபிமானமுள்ள அப்பகுதிக்குரிய உயர்திரு பிரபாகரன் DC சார் அவர்களிடம் வாட்சப்பில் வந்ததை அனுப்பி வைத்து தங்களால் உதவிட முடியும் எனில் உதவுங்கள் அய்யா என்கின்ற கோரிக்கை வைத்தேன்.
இரண்டு மணி நேரத்திற்கு பிறகு பார்க்கிறேன் DC சார் அவர்களிடம் இருந்து மேற்கண்ட மெசேஜ் .அந்த ஏழை வியாபாரியை அழைத்து பண உதவி பொருள் உதவி மற்றும் பழைய இடத்தில் இடையூறு இல்லாமல் கடை அமைக்கவும் அனுமதி தந்து அப்பகுதி ஆய்வாளர் அவருக்கு ஆறுதல் அளித்து அனுப்பிய புகைப்படத்தை அனுப்பினார்கள்..
யாரென்றே தெரிந்திராத அந்த வியாபாரி அனுப்பிய மெசேஜ் பார்த்த தருணத்தில் இருந்த தாக்கத்தைவிட இப்புகைப்படத்தை பார்த்தவுடன் இரு மடங்கு தாக்கத்தை என்னுள் ஏற்படுத்தியது..கண்கள் சிறிது கலங்கியதுதான்..
மனிதம் மரிக்கவில்லை உதவிய
காக்கி கடவுள்களுக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள் பல …