திருவிடைமருதூர் உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் திரு.ஜெயேந்திர சரஸ்வதி மற்றும் திருநீலக்குடி காவல் உதவி ஆய்வாளர் திரு.தன்ராஜ் ஆகியோர் தலைமையிலான காவல் துறையினர், சட்டத்திற்கு புறம்பாக விற்பனைக்காக வைத்திருந்த 1250 மதுபாட்டில்கள் மற்றும் ஒரு நான்கு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து உரிய விசாரணையின் அடிப்படையில் குற்றவாளிகளை சிறையில் அடைத்தனர்.