தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின் படி வல்லம் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தலைமையில் வல்லம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ராஜேக்ஷ் மற்றும் தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் விஜய் ஆகியோர் தலைமையிலான சிறப்பு தனிப்படை பிரிவினர் திருட்டு வழக்கில் ஈடுபட்ட குற்றவாளியை கைது செய்து அவரிடமிருந்த 9 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர். மேலும் குற்றவாளி பல்வேறு மாவட்டங்களில் 21 குற்ற வழக்குகளில் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.