சென்னையில் வேலை தேடி கொண்டிருக்கும் பெண்கள் மற்றும் சென்னை நகருக்கு வேலை தேடி வரும் அப்பாவி இளம் பெண்களிடம் தனியார் நிறுவனங்களில் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி, அவர்களை அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி விபச்சாரத் தொழிலில் ஈடுபடுத்தி. பணம் சம்பாதிக்கும் குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.ஆ,அருண், இ.கா.ப., அவர்கள், உத்தரவிட்டதின் பேரில், உதவி காவல் ஆணையாளர் புருஷோத்தமன் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் ரகசியமாக கண்காணித்து மேற்படி குற்றச் செயல்களில் ஈடுபடும் விபச்சார தரகர்களை கைது செய்து, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இதன் தொடர்ச்சியாக S-7 மடிப்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் கண்ணன் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் குழுவினர் நேற்று (12.08.2024) மடிப்பாக்கம், அண்ணாநகர், 9வது தெருவில் உள்ள ஒரு வீட்டை கண்காணித்தபோது, அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தியது உறுதி செய்யப்பட்டது.
அதன்பேரில், பெண் காவலர்கள் உள்ளிட்ட காவல் குழுவினர் மேற்படி வீட்டில் சோதனைகள் மேற்கொண்டு, அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய 1.ஜான்சி (எ) பூர்ணிமா, வ/35, க/பெ.ரவி. ஜோதி அம்மாள் நகர், சைதாப்பேட்டை, சென்னை 2.அபிதேவ், வ/22, த/பெ.மோகன், பத்தன் திட்டா மாவட்டம். கேரள மாநிலம் ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், அங்கு
பாலியல் தொழிலில் ஈடுபடுத்த வைத்திருந்த 2 பெண்கள் மீட்கப்பட்டனர்.
விசாரணைக்குப்பின்னர் கைது செய்யப்பட்ட மேற்படி எதிரிகள் இருவரும்
இன்று (13.08.2024) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளனர்.