2024 ஆம் ஆண்டிற்கான புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள இரண்டாம் நிலை காவலர்கள் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை ஆகியோருக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. இதில் தென்காசி மாவட்டத்தில் இருந்து புதிதாக தேர்வாகியுள்ள 42 நபர்கள் பணி நியமன ஆணையை பெற்றுக்கொண்டனர். இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் தேர்வாகியுள்ள மீதமுள்ள 91 இரண்டாம் நிலை காவலர்கள் மற்றும் 15 தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை ஆகியோருக்கு பணி நியமன ஆணை இன்று தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஶ்ரீனிவாசன் அவர்களால் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட அலுவலர் (தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை) திருமதி.பானுபிரியா, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ரமேஷ், துணை காவல் கண்காணிப்பாளர் திரு.சாந்தமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்