
இன்று (27.11.2024) மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், மதுரை மாநகரிலிருந்து இரண்டாம் நிலை காவலர் பணிக்கு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் (TNUSRB) தேர்வு செய்யப்பட்ட 34 காவலர்கள் மற்றும் 3 சிறைத் துறை காவலர்களுக்கான பணி நியமன ஆணையை மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ.லோகநாதன் இ.கா.ப., அவர்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் துணை ஆணையர் தலைமையிடம் திருமதி. ராஜேஸ்வரி, மதுரை சரக சிறைத்துறை துணைத் தலைவர் திரு.பழனி, மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் திரு.சதீஷ்குமார் மற்றும் மதுரை தமிழ்நாடு சிறப்பு காவல் படை ஆறாம் அணி துணைத் தளவாய் (ADSP) திருமதி.BH.ஷாஜிதா ஆகியோர் உடன் இருந்தனர்.

