தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தங்கள் உயிரை பணையம் வைத்து ஒரு கொலையை தடுத்து தாக்குதலில் ஈடுபட்ட 2 எதிரிகளை சம்பவ இடத்திலேயே பிடித்து, காயம்பட்டவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த ஆத்தூர் காவல் நிலைய போலீசாரின் துணிச்சலையும் துரித நடவடிக்கையும் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர்/படைத்தலைவர் அவர்கள் இன்று (03.01.2025) சென்னை காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் வைத்து பாராட்டுச் சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி பாராட்டினார்.