கோவை மாநகர போலீஸ் கமிஷனராக பணியாற்றி வந்த பாலகிருஷ்ணன் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். கோவை மாநகர புதிய போலீஸ் கமிஷனராக சரவண சுந்தர் நியமனம் செய்யப்பட்டார்.
தமிழக போலீஸ் உயர் அதிகாரிகள் 56 பேர் பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. அதில், கோவை, திருப்பூர் கமிஷனர்கள், டி.ஐ.ஜி., துணை கமிஷனர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன் படி, கோவை மாவட்ட கமிஷனராக பணியாற்றி வந்த பாலகிருஷ்ணன் சென்னை டி.ஜி.பி., அலுவலக நிர்வாக பிரிவு ஐ.ஜி.,யாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக, கோவை டி.ஐ.ஜி.,யாக பணியாற்றி வந்த சரவண சுந்தர் பதவி உயர்வு பெற்று மாநகர போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கோவை டி.ஐ.ஜி.,யாக ஈரோடு மாவட்ட சிறப்பு அதிரடிப்படை எஸ்.பி.,யாக இருந்த சசி மோகன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல், மாநகர துணை கமிஷனராக (வடக்கு) பணியாற்றி வந்த ஸ்டாலின் கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி.,யாக மாற்றப்பட்டுள்ளார். அவரது பதவிக்கு சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி.,யாக பணியாற்றி வந்த தேவநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தெற்கு துணை கமிஷனர் சரவண குமார் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பி.,யாக மாற்றப்பட்டுள்ளார்