தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் சென்னை, எழும்பூர் அரசு அருங்காட்சியகக் கலையரங்கில் நடைபெற்ற சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு பன்னாட்டுக் கருத்தரங்கு தொடக்க விழாவில், “சிந்துவெளி வரிவடிவங்களும் தமிழ்நாட்டுக் குறியீடுகளும் – ஒரு வடிவவியல் ஆய்வு” நூலினை வெளியிட்டார். இந்நிகழ்வின்போது, மாண்புமிகு நிதி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், இ.ஆ.ப., நிதித்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் தொல்லியல் துறை ஆணையர் (மு.கூ.பொ.) த. உதயச்சந்திரன், இ.ஆ.ப., சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி. சந்தரமோகன், இ.ஆ.ப., தொல்லியல் ஆராய்ச்சி வல்லுநர்கள் கிரெக் ஜாமிசன், கா. ராஜன், நயன்ஜோத் லஹிரி, ஆர். பாலகிருஷ்ணன், டோனி ஜோசப் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்