

பொள்ளாச்சி மகாலிங்கபுரம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட ஒரு வீட்டில் சுமார் 75 லட்ச ரூபாய் மதிப்புள்ள 136 பவுன் நகை மற்றும் 3 லட்சம் ரொக்கத்தை திருடி சென்ற குற்றவாளிகளை பல சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து மதுரையில் சென்று கைது செய்த பொள்ளாச்சி மகாலிங்கபுரம் உதவி ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் தலைமையிலான தனிப்படையை மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் காவல் நிலையத்திற்கு சென்று பாராட்டினார்.
பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தைச் சேர்ந்த ஒரு வீட்டில் திருடிய மதுரை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளிகள் ஆன வைரமணி,மணிசங்கர், கார்த்திக் ஆகிய மூவரையும் 430க்கும் மேற்பட்ட சிசிடிவி கேம்ராக்களை ஆய்வு செய்து மதுரை வரை சென்று கைது செய்த மகாலிங்கபுரம் காவல் உதவி ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் மற்றும் தனிப்படையினரை மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் பாராட்டினார் மேலும் தென்காசி மாவட்டத்தைச் சார்ந்த உதவி ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் கடையம் காவல் நிலையத்தில் பணிபுரியும் போது கேரளா காவல்துறையிடம் இருந்து தப்பி ஓடிவந்த பிரபல சரித்திர பதிவேடு குற்றவாளியான பாலமுருகனை கைது செய்த சம்பவம் இவருடைய திறமைக்கு சிறப்பான சான்றாகும்.
